திரையுலகில் அறிமுகமாகும் ரஜினி-கமல் நாயகியின் மகன்

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்களுக்கு கடந்த 80களில் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அம்பிகா. 'சகலகல வல்லவன்', 'காக்கி சட்டை', 'மாவீரன்', 'நான் சிகப்பு மனிதன்', 'படிக்காதவன்', 'அந்த 7 நாட்கள்', 'காதல் பரிசு', 'எங்கேயோ கேட்ட குரல்' உள்பட பல வெற்றி படங்களில் அம்பிகா நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய அம்பிகா, விரைவில் தன்னுடைய மகன் ராம்கேசவ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகவும், அவர் தமிழ், அல்லது மலையாள திரையுலகில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இன்றைய இளையதலைமுறை நடிகர்கள் திறமையை வளர்த்து கொண்டு திரையுலகிற்கு வருவதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றி வெற்றி பெற்று வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். அதேபோல் தனது மகன் ராம்கேசவும் திரையுலகில் நுழைவதற்கு முன் முறையான பயிற்சி பெற்று அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்தார்.

More News

விஜய்க்கு அட்வான்ஸ் வாழ்த்து கூறிய தனுஷ்

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்றில் இருந்தே அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது...

தனுஷின் 'விஐபி 2' பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'விஐபி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது...

ரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி

ஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷாசேகல் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்...

ரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா? இல்லை பள்ளிக்கூடமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட லட்டர்பேட் கட்சிகள் பதறுகின்றன.

பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.